SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழர் பெருமை

2022-08-10@ 00:00:22

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டு கட்ட அகழாய்வில் ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டது. கீழடி அகழாய்வை முதன் முதலில் மேற்கொண்டவரும் மத்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை தமிழக பிரிவு தலைவருமான அமர்நாத் ராமகிருஷ்ணன் அண்மையில் கீழடி வந்து அகழாய்வு பணிகளை பார்வையிட்டுள்ளார். அப்போது, அவர் கூறிய சில தகவல்கள் பழந்தமிழரின் நாகரிக வாழ்க்கை முறையை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிடங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.  கீழடி அகழாய்வில் 5 உறைகிணறுகள் கண்டறியப்பட்டது. உறைகிணறுகள் நகர மயமாக்கலுக்கு சான்றாகும். கீழடி கட்டிடங்களை கிமு 300க்கு முன், பின் என இரு வகையாக பிரிக்கலாம். கீழடி நகரம் ஒரே காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை. கீழடி நகரம் பல்வேறு காலகட்டத்தை சேர்ந்தது. கி.மு 300ல் இருந்து 10ம் நூற்றாண்டு வரை உருவாகி இருக்கக் கூடும் என்று அமர்நாத் ராமகிருஷணன் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் கீழடி அகழாய்வை தொடர பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. தடைகளை தகர்த்தெறிந்து அறிவியல் பூர்வமாக தமிழர்களின் பெருமை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு நாகரிகத்தை தமிழர்கள் கற்றுத் கொடுத்துள்ளனர் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதியுடன் நவீன கட்டிடங்களை கட்டி அசத்தியுள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிட தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு கீழடியே சான்று. கீழடியில் கிடைத்த ஒவ்வொரு பொருட்களும் வரலாற்று சிறப்புமிக்கவை.

உலகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொழில்நுட்ப வசதியுடன் கட்டிடங்களை எந்த ஒரு சமூகமும் கட்டியிருக்க வாய்ப்பில்லை. அந்த பெருமை கீழடி அகழாய்வு மூலம் தமிழர்களுக்கு கிடைத்துள்ளது. சமீபகாலமாக தமிழர்களின் பெருமை மற்றும் தமிழ்மொழியை அழிக்க சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழர்களின் வரலாற்று பெருமைகள் அறவே தெரியாது. முதலில் அவர்கள், தமிழர்களின் பெருமைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். எந்த மொழியாலும் தமிழ் மொழியை அழிக்க முடியாது. தமிழக மக்களை ஈர்ப்பதற்காக அவ்வப்போது சில நிமிடங்கள் தமிழில் பேசினாலும், அறிவுக்கூர்மை வாய்ந்த தமிழர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.

தமிழர்களின் வரலாற்று பெருமைகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. விரைவில், உலகமே தமிழர்களின் பெருமை கண்டு வியக்கும். அறிவியல் பூர்வமாக தமிழர்களின் பெருமைகள் கீழடி அகழாய்வு மூலம் கிடைக்க பெற்று வருகின்றன. ஒவ்வொரு பொருட்களும் மிகவும் அரிதானவை. தமிழர்களின் பெருமைகளை ஒன்றிய அரசால் தடுக்கவும், மறைக்கவும் முடியாது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கட்டிட துறையில் சிறந்து விளங்கியுள்ளதை நினைத்து உலக நாடுகள் வியக்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொழில்துறை உள்ளிட்ட அனைத்திலும் தமிழர்கள் கால்பதித்ததை நினைத்து பெருமை கொள்வோம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்