தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி நோயாளியின் ரத்தம்: ரத்த வங்கி மீது போலீஸ் வழக்கு
2022-08-09@ 14:25:32

ஐதராபாத்: தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி நோயாளியின் ரத்தம் கொடுத்த ரத்த வங்கி மீது தெலங்கானா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது ஆண் குழந்தைக்கு (தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்) கடந்த இரண்டரை ஆண்டுகளாக அடிக்மேட்டில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் ரத்த வங்கியின் மூலம் அவ்வப்போது ரத்தம் ெசலுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்படும். அதன்படி கடந்த ஜூலை 20ம் தேதி குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்பட்டது. அதன்பின் குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரத்தவங்கியின் அலட்சியத்தால் தங்களது குழந்தைக்கு எய்ட்ஸ் நோயாளிகளை தாக்கும் எச்.ஐ.வி வைரஸ் உடையவரின் ரத்தம் கொடுக்கப்பட்டதாக நல்லகுண்டா போலீசில் புகார் அளித்தனர்.
அதையடுத்து ேபாலீசார் சம்பந்தப்பட்ட ரத்த வங்கியிடம் விசாரணை நடத்தினர். ரத்த தானம் வழங்குவோரிடம் இருந்து ரத்தத்தை சேகரிக்கும் முன், அவர்களது உடலில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த பல சோதனைகள் செய்வதாக ரத்த வங்கி நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர். இருந்தும் போலீசார் மேற்கண்ட ரத்த வங்கியின் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!