SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஞ்சா வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்

2022-08-09@ 00:50:14

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த கீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சகா (எ) சீனிவாசன் (23). இவர் மீது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் 6 கஞ்சா வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சரித்திர பதிவேடு குற்றவாளியான சகா (எ) சீனிவாசனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி குற்றவாளி சகா (எ) சீனிவாசனை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனையடுத்து, சீனிவாசன் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்