அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜவினர் 50 பேர் மீது வழக்கு
2022-08-09@ 00:49:16

அண்ணாநகர்: திருமங்கலத்தில் அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜவினர் 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பாஜவினர் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் அனுமதியின்றி சென்னை திருமங்கலத்தில் இருந்து பாடி மேம்பாலம் வரை பாஜ மேற்கு மாவட்ட தலைவர் மனோகர் தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை தேசிய கொடியுடன் பேரணி சென்றனர்.
இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.
தகவலறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஊர்வலமாக சென்ற பாஜவினரை தடுத்து நிறுத்தினர். இதனால், பாஜவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போக்குவரத்து நெரிசலை திருமங்கலம் போக்குவரத்து போலீசார் சரி செய்து, நெரிசலில் சிக்கிய வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசாரின் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜ மாவட்ட தலைவர் மனோகர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முதன்முறையாக கமல் பங்கேற்பு: பிப். 2வது வாரம் ஈரோட்டில் பிரமாண்ட பொதுக்கூட்டம்
மதவெறி பித்து பிடித்து-மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு அநாகரிக அரசியலில் ஈடுபடுவதா? பாஜ தலைவர் அண்ணாமலைக்கு திமுக கண்டனம்
முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
திமுக மாணவர் அணி அமைப்பாளர்களுக்கு வரும் 4, 5 தேதிகளில் நேர்காணல்: செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ அறிவிப்பு
போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
திமுக சட்டத்துறையின் லோகோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!