SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டை மேம்படுத்த குஜராத்துக்கு ரூ.608 கோடி, உ.பி.க்கு 503 கோடி தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.33 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு

2022-08-09@ 00:45:48

சென்னை: ஒன்றிய அரசு சார்பாக விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியில், தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது குஜராத் மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.608.37 கோடியும், உபி.க்கு 503 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு ரூ.33 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக், காமன்ெவல்த், ஆசிய விளையாட்டு, கிரிக்கெட்,டென்னிஸ் போட்டிகளில் இந்தியா ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளது.  இதற்கு ஒன்றிய, மாநிலங்கள் வழங்கும் நிதி மற்றும் ஊக்குவிப்புகள்தான். ஆனால், அதிலும் ஒன்றி அரசு பாரபட்சம் பார்த்து நிதி தருகிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். சமீப ஹாக்கி தொடர்களை ஒடிசா மாநிலமும், செஸ் ஒலிம்பியாட்  போட்டியை தமிழ்நாடும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன.ஆனால், இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி குறைவு.

ஆனால் பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் விளையாட்டை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும், ஊக்கப்படுத்தவும் மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று லோக் சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், ‘கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ, குஜராத் மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.608.37 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.503 கோடியும், அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.183 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்காடகா மாநிலத்திற்கு ரூ.128 கோடியும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூ.112 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.110 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை ஆந்திர பிரதேசம், அஸாம், பீகார், டெல்லி, ஹரியானா, இமாச்சல், கேரளா, மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களை விடவும் குறைவாகும். அதேபோல் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களின் எண்ணிக்கையில் டெல்லியில் அதிகபட்சமாக 121 பேரும், அசாமில் 56 பேரும், தமிழ்நாட்டில் 18 பேரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மை விட நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் குறைவாக உள்ள நாகாலாந்து மாநிலத்துக்கு 44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தை விட தமிழகத்துக்கு 11 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களிலேயே ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசுக்கு அதிகமாக வசூலித்து கொடுக்கிறது தமிழகம். ஆனால், ஒன்றிய அரசு தமிழகத்துக்கு அந்த ஜிஎஸ்டியில் இருந்து திருப்பி தரும் தொகை மிகமிகக் குறைவு என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம். வடகிழக்கு மாநிலங்கள், உத்தரபிரதேசம், குஜராத் உள்பட பல மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் மிகவும் குறைவு. ஆனால், அந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஜிஎஸ்டி தொகையை வாரி வாரி தருகிறது. ஜிஎஸ்டியில் மட்டுமல்ல ரயில்வே, கல்வி உள்பட பல்வேறு துறைகளில் ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி சொற்பமே.

அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போன்ற பெரிய போட்டிகளை நடத்தும் தமிழகத்துக்கு விளையாட்டு துறையிலும் ஓரவஞ்சனையை ஒன்றிய அரசு செய்கிறது. சிறிய மாநிலமான திரிபுராவுக்கு சுமார் 38 கோடி ஒதுக்கி உள்ள நிலையில், சிறந்த விளையாட்டு கட்டமைப்பு வைத்துள்ள பெரிய மாநிலமான தமிழகத்துக்கு சுமார் 33 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. ஒட்டு மொத்தமாக அனைத்து துறைகளிலும் தமிழகத்தை ஒன்றிய அரசு ஒதுக்கி வருகிறதோ என்ற சந்தேகம் உறுதி படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்