SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றத்தால் தொடர் கடல் அரிப்பு; மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு

2022-08-09@ 00:24:50

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடல் சீற்றத்தால் தொடர் கடல் அரிப்பை, மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மாமல்லபுரம், அடுத்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் 250க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, அனைவரும் மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். மேலும், நெம்மேலி குப்பத்திற்கு அருகே சூளேரிக்காடு இசிஆர் சாலையொட்டி உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடலிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டது. கடல் அலையை, தடுப்பதற்காக கடலில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெரிய, பெரிய கற்கள் கொட்டப்பட்டன. இதனால், கடல் சீற்றத்தின் போது, அருகில் உள்ள நெம்மேலி குப்பத்தில் கடல் அலை அதிகமாக தாக்கி வருகிறது. மேலும், அங்கு கடல் அலையின் வேகம் அதிகரித்து, கடல் 50 அடி தூரத்திற்கு முன்னோக்கி வந்து, கடல் நீர் சூழ்ந்துள்ளது.

இதனால், அங்குள்ள மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்த இடமில்லாமல் மன வேதனையில் உள்ளனர். இந்நிலையில், நெம்மேலி மீனவர் குப்பத்தில் பல மாதங்களாக கடல் சீற்றம் காரணமாக அருகில் சாலைகள் சேதமடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கடற்கரையை ஒட்டியிருந்த, வெங்கட்டம்மன் கோயில் அருகே உள்ள சிமென்ட் சாலை கடல் அரிப்பு காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று மதியம்,  நெம்மேலி குப்பத்திற்கு நேரில் வந்து கடல் அரிப்பு குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது, அங்குள்ள மீனவ மக்கள் இந்த பகுதியில் தூண்டில் வளைவு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதற்கு, கலெக்டர் ராகுல் நாத், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும், மீன்வளத் துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில், திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான், ஒன்றிய கவுன்சிலர்கள் தேசிங்கு, அருண்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்