ராஜஸ்தான் கோயிலில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி
2022-08-09@ 00:23:30

சிகார்: ராஜஸ்தானில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் காடு ஷியாம்ஜி கோயில் உள்ளது. சிராவண மாதத்தின் கடைசி திங்கட்கிழமையை வடமாநிலங்களில் மக்கள் புனித நாளாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஷியாம்ஜி கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டபோது நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர்.
அப்போது சாந்தி தேவி(63) என்ற பெண் கீழே விழுந்தார். அவரது அருகே நின்ற 2 பெண்களும் நெரிசலை தாக்குப்பிடிக்க முடியாமல், கீழே சரிந்து விழுந்தனர். இந்த சம்பவத்தில், மூவரும் பலியாயினர். 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
15 ஆண்டுகள் பழமையான 9 லட்சம் அரசு வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி நிறுத்தப்படும்: நிதின் கட்கரி அறிவிப்பு
அனல் பறக்கும் அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: நாளை ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல்
பெண் சீடர் பலாத்கார வழக்கு சாமியார் அசாராம் பாபு குற்றவாளி: தண்டனை இன்று அறிவிப்பு
ஒரே வழக்கில் இருவேறு தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழ் தேர்வு விலக்கு கோரிய மனு பிப்.6ல் விசாரணை
அதானி குழுமங்களில் முதலீடு எல்ஐசி நிறுவனம் விளக்கம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!