SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யுஜிசி நெட் 2-ம் கட்ட தேர்வு ஒத்திவைப்பு

2022-08-09@ 00:22:41

புதுடெல்லி: வரும் 12ம் தேதி முதல் நடக்கவிருந்த யுஜிசி நெட் 2ம் கட்ட தகுதி தேர்வு செப்.20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று யுஜிசி தலைவர் தெரிவித்தார். கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுவர். இந்த ஆண்டு 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய 2 வருட தேர்வுகளை ஒருங்கே நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த மாதம் 9,11,12 ஆகிய தேதிகளில்  33 பாடங்களுக்கான முதல் கட்ட தேர்வுகள் நடந்தன.  நாடு முழுவதும் 225 நகரங்களில் 310 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வுகள்  வரும் 12,13,14 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த நிலையில் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ள. இது குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில்,‘‘இம்மாதம் 12,13, 14 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த இரண்டாம் கட்ட நெட் தேர்வுகள் செப்டம்பர் 20ம் தேதியில் இருந்து 30ம் தேதிக்குள் நடத்தப்படும்’’என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்