SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது எப்படி?: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

2022-08-09@ 00:09:59

சென்னை: மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷம்புகல்லோளிகர் வெளியிட்டுள்ள அரசாணை: மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்துவது குறித்து, சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் இயக்குநரின் கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்து, அவரின் கருத்துருவை ஏற்று, கீழ் கண்ட உத்தரவுகளை பிறப்பித்து ஆணையிடுகிறது.
அதன்படி,
* ஏற்கெனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைக்கப்படுகிறது.
* அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து முடித்த பிறகு அவர்கள் உயர்கல்வி படிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் போது மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும்.
* இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
* இந்த திட்டம் முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும்.
* இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறஉள்ள மாணவியர் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து தேர்ச்சி பெற்றது  குறித்து பள்ளிக் கல்வித்துறை  சரிபார்க்க வேண்டும்.
* ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவியர் வங்கிகளில் கணக்கு தொடங்க உயர்கல்வித்துறை வழிகாட்ட வேண்டும். அவர்கள் ஜூன் 30ம் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரையிலான  ஆறுமாத காலம் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி படிப்பதற்கான சான்றுகளை வழங்க வேண்டும்.
* சமூக நலம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறையின் இயக்குநர் மூலம் ஒவ்வொரு மாதம் 7ம் தேதியில் மேற்கண்ட ரூ. 1000 தொகையை  செலுத்த வேண்டும்.
* இந்த திட்டத்தை செயல்படுத்த  மாநில அளவில்  திட்ட நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும். அதில் சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் இயக்குநர், அல்லது இணை இயக்குநர், கணக்காளர்,  இடம் பெற வேண்டும். வெளியில் இருந்து 3 நபர்களை நியமித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு அந்த அரசாணையில் அரசு கூடுதல்  முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்