SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாராட்சி கிராமத்தில் காய்கறி குடோனாக மாறிய சமுதாய கூடம்

2022-08-09@ 00:06:26

ஊத்துக்கோட்டை:  தாராட்சி கிராமத்தில் காய்கறி  குடோனாக மாறிய சமுதாய கூடத்தை  அகற்றிவிட்டு மீண்டும் சமுதாய கூடமாக மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம்  ஒன்றியம் தாராட்சி   ஊராட்சியில்  4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதை சுற்றி தொம்பரம்பேடு, ஆலங்காடு, பால்ரெட்டி கண்டிகை  உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஊத்துக்கோட்டை,  பெரியபாளைம்  போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள திருமண மண்டபங்களில்  அதிக வாடகை கொடுத்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியிருந்தது.

அவ்வாறு, நிகழ்ச்சிகள்  நடத்த அதிக அளவில் வாடகை  பணம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, தாராட்சி கிராமத்தில்   சமுதாய கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு   சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர். இதனை தொடர்ந்து, 10 வருடத்திற்கு பிறகு தாராட்சி சமுதாய கூடம் பழுதடைந்து காணப்பட்டது. இதனை பயன்படுத்தி சமுதாய கூடத்தில் சிமெண்ட் மூட்டைகள் மற்றும் தனியார் சிலர் நெல், வேர்கடலை போன்ற மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தனர்.  இதனால் சிறு, சிறு நிகழ்ச்சிகள் நடத்த ஏழை, எளிய மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும்  கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை அந்த சமுதாய கூடத்தில் காய்கறிகள் வைக்கப்பட்டு குடோனாக மாறியுள்ளது.

எனவே  சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, தாராட்சியில் உள்ள சமுதாயகூடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு  பழுதடைந்து காணப்பட்டது. இதில் தற்போது நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை.  இந்த சமுதாய கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடுவார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால், அதை தற்போது காய்கறி குடோனாக மாற்றிவிட்டனர். இதனால் ஏழை, எளிய மக்களாகிய நாங்கள் எங்கள் இல்ல நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் போனது.  எனவே சமுதாய கூடத்தில் உள்ள காய்கறி குடோனை வேறுயிடத்திற்கு மாற்றி, மீண்டும் சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்