தாமரைப்பாக்கம் கிராமத்தில் போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா: 200 பக்தர்கள் பங்கேற்பு
2022-08-09@ 00:06:14

பெரியபாளையம்: தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில், விரதம் இருந்து காப்பு கட்டிய 200 பக்தர்கள், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி மண்ணடியில் ஊர் கூடி கூழ் வார்த்தல், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை நிகழ்ச்சி நடந்தது.
இதனை கடந்த 5ம் தேதி 200 பக்தர்கள் காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் 7ம் தேதி அன்று காலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், என வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூ கரகம் புறம்பாடு அழகுபானை நிற்க வைத்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் காப்பு கட்டி விரதம் இருந்த 200 பக்தர்கள் புனித நீராடிய இடத்திலிருந்து உற்சவர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த விழாவிற்கு, வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில், அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்றிரவு இரவு 10 மணி அளவில்... அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. அம்மன் வரும் பகுதிகளில் உள்ள பக்தர்கள் அம்மனுக்கு பூ, பழங்கள் என படைத்து அம்மனை வழிப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், ஊர் பெரியவர்கள், மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!