கால்நடைகளை வேட்டையாடிய ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
2022-08-08@ 20:22:03

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை வேட்டையாடிய ஆண் சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் அப்பகுதிமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப்பகுதியை ஒட்டி உள்ள குப்புசாமி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
தேசிய கீதம் அவமதிப்பு எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்
கோயில்களை லாபம் பார்க்கும் இடமாக மாற்றக்கூடாது: போலி இணையதள வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா தமிழ்நாட்டு பக்தர்கள் 2,500 பேருக்கு அனுமதி: பிப். 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!