SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விலையில்லா ஆடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்-கால்நடை கூடுதல் இயக்குனர் ஆலோசனை

2022-08-08@ 14:31:09

அரியலூர் : அரியலூர் மாவட்டம் கடுகூரில் கால்நடை மருந்தகத்தில் கூடுதல் இயக்குனர் டாக்டர் இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விலையில்லா ஆடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்களை கூடுதல் இயக்குனர் டாக்டர் இளங்கோவன் நேரில் ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக, அரியலூர் கோட்டத்தில் கடுகூர் கால்நடை மருந்தகத்தில் திடீர் ஆய்வு செய்தார். கால்நடை மருந்தகத்திற்கு தினசரி வருகை தரும் கால்நடைகளின் எண்ணிக்கை, சிகிச்சை முறைகள் குறித்து கடுகூர் கால்நடை மருத்துவர் குமார் தெரிவித்தார்.

 முதலுதவி மற்றும் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மருந்து இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியின் பயன்பாட்டு விபரம் மற்றும் பயனடைந்த ஆடுகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். மருத்துவக் கழிவுகள் கையாளும் விதம் குறித்தும், மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து குறித்த காலத்தில் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

 கால்நடை மருந்தகத்தை சுற்றியுள்ள இடங்களில் கால்நடைகளுக்கான தீவன மரங்கள் பராமரிக்கப்படுவதை பார்வையிட்டார். மேலும், மேய்ச்சல் நில மேம்பாட்டு திட்டத்தின்கீழ், நிலத்தை சீர் செய்து கால்நடைகளுக்கான தீவனப்பயிர் சாகுபடி செய்யவும் அறிவுறுத்தினார். முன்னதாக, தமிழக அரசின் சிறப்பு திட்டமான, மகளிரை தொழில் முனைவோராக கொண்டு வெள்ளாடு வளர்க்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஆடுகளை பார்வையிட்டார். ஆடுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ கூடாது என்று எச்சரிக்கை செய்த கூடுதல் இயக்குனர், ஆடுகளை முறையாக பராமரிக்கவும், அவ்வப்போது கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கவும், திட்டத்தின் பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிறிய அளவிலான நாட்டுக் கோழி பண்ணைகள் நிறுவும் திட்டத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று, திட்டத்தை விரைவில் செயல்படுத்தவும் அறிவுறுத்தினார். இதனை அடுத்து, உடையார்பாளையம் கோட்டத்திற்கு உட்பட்ட வீராக்கன் கால்நடை மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட கால்நடை காப்பீடு திட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.இந்தஆய்வின்போது, அரியலூர் கோட்ட உதவி இயக்குனர் சொக்கலிங்கம் மற்றும் உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குனர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்