SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுவதும் வெளியேற்றம்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

2022-08-08@ 11:01:30

தஞ்சாவூர்: தஞ்சை கீழணைக்கு நீர்வரத்து சற்று குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 92 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. கூடுதல் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் கீழணைக்கு வரும் தண்ணீரும் அதிகரித்தது. தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் அமைந்துள்ள கீழணையில் இருந்து கடைசியாக 2 லட்சத்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்றது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் கல்லணையில் இருந்து கீழணைக்கு 1 லட்சத்து 92 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கீழணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் கடலுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வாழும் மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் பாதிப்புகள் தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்