SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளியும், தமிழ்நாட்டுக்கு கிள்ளியும் கொடுத்த ஒன்றிய அரசு

2022-08-08@ 08:35:06

டெல்லி: விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதியை அள்ளிக் கொடுத்துள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு மட்டும் கிள்ளிக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. விளையாட்டை விரிவுப்படுத்தவும், மற்றும் ஊக்கப்படுத்தவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று மக்களவை எம்பிக்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில் Khelo India எனப்படும் விளையாட்டு திட்டத்தின் கீழ் அதிகபட்சமா குஜராத்திற்கு ரூ.608 கோடி, உ.பி.க்கு ரூ.503 கோடி, அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ.183 கோடி, கர்நாடகாவிற்கு ரூ.128 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.112 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் 33 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது ஆந்திரா, அசாம், பீகார், டெல்லி, அரியானா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட மிக்ககுறைவு ஆகும். அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களின் எண்ணிக்கையும் பொறுத்தவரை டெல்லியில் 121 பேரும், அசாமில் 56 பேரும் உள்ளனர். தமிழ்நாட்டில் வெறும் 18 பயிற்சியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்