கோயில் பூசாரிகளுக்கு மாதம் 4000 ஊதியம் நலச்சங்கம் கோரிக்கை
2022-08-08@ 01:43:22

சென்னை: கோயில் பூசாரிகளுக்கு மாதம் ஒரு 4000 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்கத் தலைவர் வாசு கூறியதாவது: திமுக ஆட்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயில்களுக்கும், பூசாரிகளுக்கும் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து விரைந்து செயல்படுத்தி வருகின்றார்.
குறிப்பாக சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூசாரிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை 1000, கிராமப்புற திருப்பணி நிதி 2 லட்சம் ஆக உயர்வு, ஒரு கால பூஜை வைப்பு நிதி 2 லட்சமாக உயர்வு, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான,அரசு பூசாரிகளுக்கு இன்னும் பல திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக பூசாரிகள் ஓய்வூதியத்4 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!