அமெரிக்க கடற்படையின் கப்பல் காட்டுப்பள்ளி துறைமுகம் வருகை
2022-08-08@ 01:31:53

சென்னை: எல்டியின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்துக்கு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு கப்பல் நேற்று வந்தது. அது, காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை பழுது பார்ப்பது மற்றும் பராமரிக்கும் பணியில் ஈடுபடும். இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு செயலர் அஜய் குமார், துணை அட்மிரல், சஞ்சய் ஜாஜு, கூடுதல் செயலாளர் மற்றும் ராஜீவ் பிரகாஷ், பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தி, இணை செயலாளர் ஆகியோர் கப்பலை வரவேற்றனர்.
மேலும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜூடித் ரவின் மற்றும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி ரியர் அட்மிரல் மைக்கேல் பேக்கர் ஆகியோரும் கப்பல் கட்டும் தளத்தில் உடனிருந்தனர். இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் கூறுகையில், ‘‘அமெரிக்க கப்பல்களுக்கு தளவாடங்கள், பழுது மற்றும் மறுசீரமைப்புகளை வழங்குவதற்கான இந்தியாவின் முன்முயற்சி, இந்தியாவிற்கும் இடையேயான மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதில் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது’’என்றார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜூடித் ரவின் கூறுகையில், ‘‘இது நமது வலுப்படுத்தப்பட்ட அமெரிக்கஇந்திய கூட்டாண்மையின் அடையாளமாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு முக்கிய வளர்ச்சியாகும்’’என்றார்.
மேலும் செய்திகள்
தாயின் ஓய்வூதிய பணம் வராததால் விரக்தி அதிகாரிகள் கண் முன் வாலிபர் தீக்குளிப்பு: போலீசார் விசாரணை
8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு எதிரொலி மெரினாவில் ஆயுதங்களுடன் மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி, 2 மாணவர்கள் கைது
அண்ணாமலை பேனர் கிழிப்பு பாஜ நிர்வாகிகள் மீது போலீசில் புகார்
மனுநீதி நாள் முகாமில் 44 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வரி செலுத்தாததால் செல்போன் டவரின் மின் இணைப்பு துண்டிப்பு
அமைந்தகரையில் பரபரப்பு தற்கொலைக்கு முயன்ற மனநோயாளி மீட்பு: போலீசார் விசாரணை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!