40 கிலோ வெடிபொருளை சுமக்கும் எல்லை பாதுகாப்பில் நவீன டிரோன்கள் எச்ஏஎல் நிறுவனம் தயாரிப்பு
2022-08-08@ 00:48:04

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பில் அதிக உயரம் கொண்ட மலை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு நவீன ரக டிரோன்களை உருவாக்கும் பணியில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவம் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில்,அதிக உயரம் கொண்ட மலை பகுதிகள், சீனாவை ஒட்டிய எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு நவீன ரக டிரோன்களை தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்(எச்ஏஎல்) நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக டிரோன்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் ஏவுகணைகள் உள்பட 40 கிலோ எடையை சுமக்கும் திறனுடைய டிரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 60 டிரோன்கள் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டிரோன்கள் பொருள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்த முடியும்’’என்றன.
மேலும் செய்திகள்
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
இளநிலையில் இருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற அனுமதி பெற தேவையில்லை: யுஜிசி அறிவிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 99 பேருக்கு கொரோனா உறுதி: உயிரிழப்பு இல்லை.! ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!