SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்போனில் காதலியுடன் மோதல் தீக்குளித்த காதலன் கவலைக்கிடம்

2022-08-07@ 19:44:15

அண்ணாநகர்: செல்போனில் காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தீக்குளித்த காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(24). இவர் சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் நண்பர்களுடன் வசித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 6 மாதமாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.

நேற்றிரவு பிரகாஷ், தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காதலி தனது செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பிரகாஷ் தனது வீட்டில் இருந்த பெயிண்ட் கலக்க பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் பரவிய நிலையில், அலறியடித்துக்கொண்டு சாலைக்கு ஓடிவந்த பிரகாஷை அப்பகுதியினர் மீட்டனர். பின்னர் அவரது உடலில் கோணியை போர்த்தியை தீயை அணைத்தனர். பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். காதலியுடன் ஏற்பட்ட தகராறில், காதலன் தீக்குளித்துக்கொண்டது கோயம்பேடு பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்