SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12 அடி அகலம், 32 அடி நீள தேசிய கொடி உருவாக்கி மழலையர் பள்ளி குழந்தைகள் சாதனை

2022-08-07@ 16:45:29

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 12 அடி அகலம், 32 அடி நீளத்தில் தேசிய கொடி உருவாக்கி தனியார் மழலையர் பள்ளி குழந்தைகள் சாதனை படைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே எல்லப்பா நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி  செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15ம்தேதி இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட இருக்கும் நிலையில், வீடுகள் தோறும் கொடியேற்றி கொண்டாட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எல்லப்பாநகர் தனியார் பள்ளியில் மழையர்கள்  மூலம் தேசிய கொடி உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நூற்றுக்கும் மேற்பட்ட 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மூலம் 12 அகலமும்‌, 32 அடி நீளமும் கொண்ட மூவர்ண தேசிய கொடி உருவாக்கப்பட்டது. இந்த தேசிய கொடி கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் மழலையர் பள்ளி ஆசிரியர்களும், குழந்தைகளும் மகிழ்ச்சி அடைத்தனர். இதையடுத்து  சாதனை படைத்த குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “எங்கள் பள்ளி குழந்தைகள் மூலம் தேசிய கொடி வடிவமைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இது மறக்க முடியாத அனுபவம்” என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்