கனமழை எதிரொலியாக இடுக்கி அணை திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
2022-08-07@ 14:26:54

திருவனந்தபுரம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாகவும், தமிழகத்தின் நீராதாரமான முல்லை பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 2,400 கனஅடிக்கு மேல் உபரி நீர் திறப்பதினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல்மட்டத்திலிருந்து 2,403 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2,384.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,342 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இடுக்கி அணையின் உபரி நீர் வெளியேறும் 3-வது மதகு திறக்கப்பட்டு வினாடிக்கு 1,776 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இடுக்கி அணை நிரப்புவதற்கு 19 அடி மீதம் உள்ள நிலையில் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மாலை மற்றும் முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர்திறப்பு ஆகியவற்றால் இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.
இதனால் முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!