SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மந்தனா அதிரடி அரை சதம்; மகளிர் டி20 பைனலுக்கு முன்னேறியது இந்தியா

2022-08-07@ 02:46:35

பர்மிங்காம்: காமன்வெல்த் மகளிர் டி20 இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் நேற்று இங்கிலாந்துடன் நேற்று மோதிய இந்தியா, டாஸ் வென்று பேட் செய்தது. மந்தனா - ஷபாலி முதல் விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ஷபாலி 15 ரன், மந்தனா 61 ரன் (32 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஹர்மன்பிரீத் 20, தீப்தி 22 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். பூஜா டக் அவுட்டானார். இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. ஜெமீமா 44 ரன்னுடன் (31 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின்  கேப்டன் ஸ்கிவர் 41 ரன், வியாட் 35, அமி ஜோன்ஸ் 31, சோபியா 19 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பரபரப்பான கடைசி கட்டத்தில் 3 இங்கிலாந்து வீராங்கனைகள் ரன் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 2, தீப்தி ஒரு விக்கெட் எடுத்தனர். காமன்வெல்த் தொடரில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ள மகளிர் டி20 போட்டியில், இந்தியா பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்