SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்ன மம்மிக்காக தேனிக்காரருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவரும் நபரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2022-08-07@ 01:15:40

‘‘இலை கட்சியில் மீடியேட்டராக சின்ன மம்மிக்காக யார் பேசி வர்றாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரர்-  தேனிக்காரர் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. தான் நம்பிய சேலம்காரரே தன்னை வில்லியாக பார்ப்பது சின்ன மம்மிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்காம். இதனால, எதிரிக்கு எதிரி நண்பன் பாணியை கடைபிடிக்க முடிவு செய்துள்ளாராம் தேனிக்காரர் தரப்பு. இதை எப்படியோ மோப்பம் பிடித்த சின்ன மம்மி தரப்பு, தன் ரத்த சொந்தம் ஒருவரை களத்தில் இறக்கி இருக்கிறாராம். அவர்தான் ேதனிக்காரரை சந்தித்து பேசி வருகிறாராம். லீகல் டீம், கரன்சி டீம், டெல்லியில் இருக்கும் டீம்களை தருகிறோம். ஆனால், நான் இலை கட்சியின் பொதுச் செயலாளராக ஆகியே தீர வேண்டும். நான் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர் என்று கொக்கி போட்டுள்ளாராம் சின்ன மம்மி. அதை அப்படியே பாஸ் செய்து இருக்கிறார் சின்ன மம்மியின் ரத்த சொந்தம். அந்த நபர் வேறு யாருமில்லை... மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த  சின்ன மம்மியின் ‘சகோதரர் தானாம். அவரும் களத்தில் தன் ஆட்களை விட்டு ஆழம் பார்த்து இணைப்பு சக்சஸ் ஆகும்னு சின்ன மம்மிக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளாராம். அதற்கான  அனைத்து வேலைகள் திரைமறைவில் கச்சிதமாக நடந்து வருகிறதாம்.  கடலோரம், மனுநீதி சோழன், நெற்களஞ்சியம்,  மலைக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இலை கட்சியின் முக்கிய  நிர்வாகிகளையும் இழுப்பதற்கான வேலைகள் சீக்ரெட்டாக நடந்து வருகிறதாம்.  சின்ன மம்மியின் சகோதரரின் நகர்வுகளை சேலத்துக்காரர் டீம் உன்னிப்பாக  கவனித்து வருகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ பொதுப்பணிதுறையில் நாலாயிரம் கோடிக்கு மேல முறைகேடு என்ற வழக்கும், நீதிமன்ற வழக்கும் சேர்ந்து சேலம்காரர்களை தேனி பக்கம் மாற்றிவிட்டதாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.  

‘‘ இலைக்கட்சியின் தலைவராகி மாங்கனி மாவட்டத்து மக்களுக்கே பெருமை சேர்த்துட்டேன் என்று கூறி மாங்கனி மாஜி, எல்லோரையும் புல்லரிக்க வச்சாரு. ஆனா கட்சிக்காரங்க அவரை பார்த்து பேசுவது என்பதெல்லாம் குதிரைக்கொம்பாம். இதனால, தேனிக்காரருக்கு மாங்கனி நகரில் ரகசிய ஆதரவு இருந்தாலும், இதுவரை அது லீக் ஆகாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தொழிற்சங்க நிர்வாகி ஒருத்தரு, தேனிப்பக்கம் தாவி பரபரக்க வச்சிருக்காராம். அதுமட்டுமில்லாம கட்சிக்காக ஓடி ஓடி உழைத்த என்னை குப்பைத்தொட்டியில தூக்கி வீசிட்டாங்கன்னு வேற குமுறுறாராம். இருநூறு பேர் இருந்த தொழிற்சங்கத்தில் பத்தாயிரம் பேரை சேர்த்து வலுசேர்த்து தலை நிமிர வச்சேன். எந்த ஆர்ப்பாட்டம்ன்னாலும் எங்க கொடிதான் முதலில் பறக்கும். பால் சொசைட்டி தலைவரா இருந்து மில்க் உற்பத்தியை அதிகரிச்சேன். ஆனா எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் தீர்மானத்தை போட்டு என்னை தூக்கிட்டாங்க. அதே சொசைட்டியின் பதிவாளர், நான் குற்றமற்றவன் என்ற சான்றிதழை கொடுத்திருக்காரு. இதையொல்லாம் பொறுத்துக்கிட்டு நாலு வருசமா விசுவாசமா இருந்தேன். கடுகளவு கூட மதிக்கல. மாங்கனி மாநகருல பெரும்பாலான நிர்வாகிகளின் மைன்ட்செட் இப்படித்தான் இருக்கு. அவர்களும் விரைவில் வெளியே வருவாங்க. அதனால மம்மி அடையாளம் காட்டிய தேனியின் கரத்தை வலுப்படுத்துவோம்ன்னு அந்த நிர்வாகி சபதம் வேறு ஏற்றிருக்காராம். அதோட ஆள் சேர்க்கும் படலத்தையும் தொடங்கிட்டாராம். இதனால மாங்கனி மாஜியின் அடிபொடிகள் கண்கொத்தி பாம்பாட்டம் எல்லோரையும் கண்காணிச்சிக்கிட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பப்ளிசிட்டிக்காக காத்திருந்து ஏமாந்த அரசியல்வாதி யாருப்பா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நீலகிரி  மாவட்டம் கொடநாட்டில் உள்ள மாஜி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான  பங்களாவுல நடந்த கொலை- கொள்ளை வழக்கு   வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள், சாட்சிகள் என  ஒருவர் விடாமல் அத்தனை பேரிடமும் காக்கிகள்  விசாரணை நடத்தி  வர்றாங்க. கோவை  பி.ஆர்.எஸ். வளாகத்தில் உள்ள அறையில் இந்த விசாரணை நடக்கிறது. சம்மன் அனுப்பி நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டவர், இலைக்கட்சியின்  அதிகாரப்பூர்வ நாளிதழின் மாஜி ஆசிரியராம். இவர், `நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்..’ என்ற வடிவேல் காமெடிபோல்,  விசாரணைக்கு செல்லும் முன்னரே டிவிட்டரில் பதிவிட்டுவிட்டார். இதில்,  ஹைலைட் என்னவென்றால், விசாரணை முடிந்து வெளியே வந்ததும், `ஏம்பா... பேட்டி  எடுக்க `பிரஸ்’ யாரும் வர்லயா என கேள்வி கேட்டு அடிபொடிகளுக்கு அதிர்ச்சி அளித்தாராம். எல்லோரும் விசாரணை முடிந்து ஓடி ஒளிகின்றனர். இவரு என்னடா என்றால் கூட்டத்தை கூட்டுகிறாரே என்று அவரின் அடிபொடிகள் ஒதுங்கிட்டாங்களாம். அதில் ஒருவர், ‘பிரஸ் யாரும் இல்லை அண்ணே’ என பவ்வியமாக பதிலளித்தார். `சரி...  போலாம்... வண்டியை எடு...’’ எனக்கூறி சிட்டாக பறந்தாராம். இவர் தன்னை தலைவராக நினைத்து கொண்ட அப்பாவி என்று அடிபொடிகளில் ஒருவர் கமென்ட் அடித்தார்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘என்னை எதுக்காக மாத்தினாங்க என்று தன்னை சந்திக்கும் நபர்களிடம் காக்கி அதிகாரி புலம்புகிறாராமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.  

‘‘தக்கலையில்  காவல் உயர் அதிகாரியாக இருந்தவரை திடீரென்று  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிட்டாங்க. இதனை  கேள்விப்பட்டதும் அந்த அதிகாரி, என்னை எதற்காக காத்திருப்போர் பட்டியலில்  வைத்துள்ளார்கள் என்பது தெரியாது என்று தன்னை பார்ப்பவர்களிடம் சொல்லி வருகிறாராம். அதற்கான காரணத்தை உயரதிகாரியிடம் கேட்டு சொல்லேன் என்று கெஞ்சுகிறாராம்.  குமரி மாவட்டம் வழியா கேரளாவுக்கு கனிமவளங்கள் அதிகம்  கடத்தி செல்வதை அவர் கண்டுகொள்ளாதது தான்  காத்திருப்புக்கு காரணமாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்