சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தல்
2022-08-06@ 17:41:22

சென்னை; பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, உலக வங்கி நிதியுதவி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி, ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவி, மூலதன நிதி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, வெள்ளத்தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு திட்ட நிதியுதவியுடன் சுமார் 1055 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் அவர்கள் அவ்வப்பொழுது, இந்தப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மேலும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களையும், அரசு உயர் அலுவலர்களையும் பணி முன்னேற்றம் குறித்து அவ்வப்பொழுது ஆய்வு செய்ய அறிவுறுத்தி, அதுகுறித்த விவரங்களை கேட்டறிந்து வருகிறார். வடகிழக்கு பருவமழையானது அடுத்த இரண்டு மாதக் காலத்தில் தொடங்க உள்ள நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்பேரில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி குறைந்த சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களுக்கும்,
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததார்களுடனான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 05.08.2022 அன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு சிப்பங்கள் வாரியாக மழைநீர் வடிகால் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய சென்னையின் பிரதான பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பணி நடைபெறும் பொழுது, ஒப்பந்ததாரர்களுக்கு குறிப்பாக பிற சேவைத்துறைகளிடமிருந்து முழு ஒத்துழைப்பு பெற மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.08.2022) கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பிரதான பகுதிகளான ராமசாமி சாலை, பி.வி. ராஜமன்னார் சாலை, அண்ணா பிரதான சாலை, பசுல்லா சாலை, இரயில்வே பார்டர் சாலை, சுப்ரமணிய நகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும்,
தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஜி.என்.செட்டி சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மழைநீர் வடிகால்களில் நீர் உட்புகும் வண்டல் வடிகட்டி தொட்டிகள் (Silt Catch Pit) உரிய அளவுகளின் படி உள்ளதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை, வீராசெட்டி தெரு, டிக்காஸ்டர் சாலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, காந்தி கால்வாய் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்கள் பக்கிங்ஹாம் கால்வாயில் இணையும் இடத்தில் குறிப்பாக தமிழ்நாடு மின் தொடர்பு கழக மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கால்வாயில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம் கவி அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (பணிகள்) திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலக் குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார் அவர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி விட்டார்: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மீது ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்: காவல் துறையின் விசாரணையில் உண்மை வெளியானது
வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த பிரபல ரவுடி சிறையில் அடைப்பு
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,628 பேரிடம் அபராதமாக வசூலான ரூ.1.98 கோடி: நீதிமன்ற உத்தரவின்பேரில் 319 வாகனங்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வடபழனி, கந்த கோட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
எடப்பாடி அணி வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவாக பிரசாரம் செய்வாரா?..முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!