SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாக்கியில் தோல்வி

2022-08-06@ 17:22:01

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் நேற்று இரவு இந்தியா-ஆஸ்திரேலியாவுடன் மோதியது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடித்தது. இரண்டாவது பாதி இந்தியா பதில் கோல் அடித்தது. இதன் பிறகு கோல் எதுவும் விழாததால் 1-1 என ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட்
முறை வழங்கப்பட்டது.

இதில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து பெனால்டி ஷூட் அவுட்டில் 2-0 என நியூசிலாந்தை வீழ்த்தியது.  நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இங்கிலாந்துடன்  ஆஸ்திரேலியா மோதுகிறது. இந்தியா வெண்கலத்திற்கான போட்டியில், நியூசிலாந்துடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்