SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செஸ் ஒலிம்பியாட் 8வது சுற்று தொடங்கியது!: இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதி செய்யப்படுமா என எதிர்பார்ப்பு

2022-08-06@ 16:00:10

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட்டின் 8-வது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இன்று உறுதி செய்யப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிக்குள் வெற்றிக்காக மல்லுக்கட்ட இருப்பதால் போட்டி களம் சூடுபிடித்துள்ளது. நேற்றைய ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று 8வது சுற்று போட்டி தொடங்கியிருக்கிறது. 186 நாடுகள் இடையிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. ஓபன், பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி மகுடம் சூடும். இதுவரை 7 சுற்று நிறைவடைந்து தற்போது, 8வது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் ஓபன் பிரிவில் 4ம் இடத்தில் உள்ள இந்திய ஏ அணியானது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அர்மேனியாவுடன் மோத உள்ளது. 3 இடத்தில் உள்ள இந்திய பி அணியானது 4ம் இடத்தில் உள்ள அமெரிக்க அணியுடன் மோத இருக்கிறது. மகளிர் பிரிவில் 1ம் இடத்தில் உள்ள இந்திய ஏ அணியானது, 2ம் இடத்தில் உள்ள உக்ரைன் நாட்டுடன் மோத உள்ளது. பதக்கம் யாருக்கு? என்பதை இந்த போட்டி தான் தீர்மானிக்கும் என்ற வரையறையும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஓபன் பிரிவில் உள்ள இந்திய சி அணியானது பெரு அணியுடன் மோத உள்ளது. மகளிர் பிரிவில் உள்ள ஏ அணியானது உக்ரைனுடனும், பி அணியானது குரேஷியாவுடனும், சி அணியானது போலாந்துடனும் விளையாட உள்ளது. ஓபன் பிரிவில் நேற்று வரை நடந்து முடிந்த போட்டிகளில், இந்திய பி அணியானது ரேங்க்கிங் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று 3ம் இடத்திலும், இந்திய ஏ அணியானது 12 புள்ளிகள் பெற்று 4ம் இடத்திலும், இந்திய சி  அணியானது 10 புள்ளிகள் பெற்று 19ம் இடத்தில் உள்ளது.

மேலும், இன்றைய போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பட்டியல்கள்: இந்திய ஏ அணியில்,  ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ், அர்ஜூன் எரிகேசி, நாராயணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழக வீரர் சசிக்கிரனுக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பி அணியில் உள்ள வீரர்கள், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இளம் வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். மேலும் தொடர் வெற்றிகளை பதிவு செய்துவரும் குகேஷ் இன்றைய போட்டியில் கலக்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அதேபோல் இதில் சரின் நிகில், தமிழகவீரர் பிரக்ஞானந்தா போட்டியிட உள்ளனர். மட்டுமல்லாமல் ரௌனத் அத்வினிக்கு நேற்று ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இன்று விளையாட உள்ளார் மற்றும் அதேபோல் நேற்று விளையாடிய அஜீபனுக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய சி அணியில் சூர்யா சேகர்,கங்குலி விளையாட உள்ளனர். தமிழக வீரர் சேதுராமன், அபிஜித் குப்தா, கார்த்திகேயன் முரளி, அர்ஜுன் எரிகேசிக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் பி பிரிவில் இன்று சௌமியா சாமிநாதனுக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் சி பிரிவில் ஷாகித் வர்ஷினி-க்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்