SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செஸ் ஒலிம்பியாட் 2022

2022-08-06@ 02:07:18

அரங்கம் மாறிய கார்ல்சன்
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 2 முதல் 6வது சுற்று வரை முதல் அரங்கில் விளையாடி வந்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே) நேற்று திடீரென 2வது அரங்கத்தில் விளையாடினார். கார்ல்சன் ஏற்கனவே விளையாடிய 5 சுற்றில் 4 வெற்றி, 1 டிரா செய்துள்ள நிலையில், 2வது அரங்கில் அவரது செயல்பாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிங்களத்து சின்னக்குயில்
இலங்கை வீராங்கனை ரணசிங்க நேற்று 7 வது சுற்றில் கொசோவோ நாட்டை சேர்ந்த சரசி ரினேசா உடன் மோதினார். இந்த போட்டியில் வென்ற ரணசிங்க கூறுகையில், ‘எங்கள் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வசதி இல்லாமல் இருக்கிறோம். தொடர் மின் தடையால் ஆன்லைனில் கூட எங்களால் பயிற்சி பெற முடியவில்லை. இது பெரிய சவாலாக உள்ளது.  இப்போட்டியில், என்னால் முடிந்த அளவுக்கு விளையாடி வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு, தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும்’ என்றார்.

இந்தியா-3 அணியை வீழ்த்தியது இந்தியா-1
சென்னை, ஆக. 6: செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா-3 அணியுடன் மோதிய இந்தியா-1 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இந்தியா-3 அணிக்காக களமிறங்கிய அபிஜீத் குப்தா, புரானிக் அபிமன்யுவுக்கு எதிராக இந்தியா-1 அணி சார்பில் எரிகைசி அர்ஜுன், எஸ்.எல்.நாராயணன் வெற்றிகளைக் குவிக்க, ஹரிகிருஷ்ணா பென்டாலா - சூரியசேகர் கங்குலி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி - சேதுராமன் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
கியூபாவை வீழ்த்தியது இந்தியா-2: 7வது சுற்றில் கியூபா அணியுடன் நேற்று மோதிய இந்தியா-3 அணி 3.5க்கு .5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது. இந்தியா-3 சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, சரின் நிஹல் வெற்றி பெற்று தலா 1 புள்ளி பெற்ற நிலையில், கியூபாவின் அல்மெய்டா குவின்டானா ஒமருடன் மோதிய அதிபன் டிரா செய்து அரை புள்ளி பெற்றார். குகேஷ் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பெற்று அசத்தினார்.
மகளிர் பிரிவு 7வது சுற்றில் களமிறங்கிய இந்தியா-1 அணி 2.5 - 1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய வீராங்கனைகள் டானியா சச்தேவ், வைஷாலி வெற்றி பெற்ற நிலையில் கோனெரு ஹம்பி அதிர்ச்சி தோல்வி கண்டார். ஹரிகா - பாலஜெயேவா கானிம் மோதிய ஆட்டம் டிரா ஆனது.
கிரீஸ் அணியுடன் மோதிய இந்தியா-2 மகளிர் அணி 1.5 - 2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
மற்றொரு மகளிர் 7வது சுற்று போட்டியில் இந்தியா-3 அணி 3-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வென்றது. ஈஷா, நந்திதா வெற்றியைப் பதிவு செய்ய, பிரத்யுஷா, விஷ்வா வஸ்னவாலா டிரா செய்தனர்.

அனுமதி அட்டை பிரச்னை... ஆரோன் வருத்தம்
இந்தியாவுக்காக 1961ல் முதல் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை பெற்றுத் தந்த மேனுவல் ஆரோன் நேற்று மாமல்லபுரத்தில் நடந்து வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சுற்றிப் பார்த்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.போட்டி நடக்கும் முதல் மற்றும் 2வது அரங்கை சுற்றிப் பார்த்தேன். வீரர், வீராங்கனைகள் தங்கியுள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் நீச்சல் குளம் உள்ளது. இவற்றையெல்லாம், பார்க்கும்போது வீரர்களுக்கு செஸ் விளையாடும் எண்ணமே வராது போல் உள்ளது. போட்டியை கண்டுகளிக்க அனுமதி அட்டை கிடைப்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்கு, முக்கிய காரணமே சர்வதேச கூட்டமைப்பு தான் என குறை கூறுகிறார்கள். உணவு ஏற்பாடுகளை எல்லாம் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்