SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடன் என்னாகும்...?

2022-08-06@ 00:43:19

ரெப்போ வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய ரெப்போ வட்டி வீதம் 5.40 ஆக அதிகரித்துள்ளது.இந்திய  ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3ம்தேதி துவங்கி  மும்பையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று கடன்களுக்கான ரிசர்வ் வங்கி வட்டி 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த  வாரம் அமெரிக்க பெடரல் வங்கி, வட்டியை 0.35 புள்ளிகள் வரை உயர்த்தியது.  இதனால் இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் நாட்களில் வட்டி வீதத்தை உயர்த்தும்  என எதிர்பார்க்கப்பட்டது. அது, தற்போது நடந்துவிட்டது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி,  கடன்களுக்கான வட்டி வீதத்தை 0.50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

“நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால்,  ரெப்போ வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடன்களுக்கான வட்டி  வீதம் 4.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணவீக்கம்  அதிகரித்தே காணப்படும்” என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று  பரவலுக்கு முன்பு நாட்டில் வட்டி வீதம் 5.15 சதவீதமாக இருந்தது. தற்போது,  5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் 3வது முறையாக ரெப்போ வட்டி  வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதமாக  கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. எனினும், நாட்டின்  மொத்தவிலை பணவீக்கம் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்த ரெப்போ வட்டி வீதம் உயர்வு  காரணமாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன்கள் அதிகரிக்கக்கூடும் என  பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பால் முதலீடுகளில்  எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டேட், பத்திரப்பதிவு சந்தை,  வங்கி வைப்பு நிதி உள்ளிட்டவை எப்படி இருக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. வட்டி விகிதத்தினையும் தாண்டி பொருளாதாரம்  மீண்டும் வரும் என ஒன்றிய அரசு கருதுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் குறுகிய காலத்தில் ரியல்  எஸ்டேட் துறையில் சரிவு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடுகளின் விலைகள் அதிகரிக்கலாம். மெட்ரோ நகரங்களில் இது தாக்கத்தினை  ஏற்படுத்தலாம்.  சர்வதேச அளவில் நிலவி வரும் சாதகமற்ற நிலைக்கு மத்தியில்,  பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி அதிகரிப்பினை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் வாகன கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன் என பல கடன்களுக்கும் வட்டி அதிகரிக்கலாம். இதனால் இனி  மாத தவணை அதிகரிக்கலாம். இது, ஏற்கனவே கடன் வாங்கியவர்கள், இனி புதிதாக கடன்  வாங்குபவர்கள் என பலரின் மத்தியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்