SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் கஞ்சா வியாபாரி உள்பட 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

2022-08-05@ 00:05:20

சென்னை: வியாசர்பாடி பி.வி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் ரமா (எ) அறுப்பு ரமா (49). எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்துவந்த இவரை, சில தினங்களுக்கு முன், 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்மீது மேலும் பல கஞ்சா வழக்குகள் உள்ளளதால், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

* வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 4வது தெருவை சேர்ந்த அருண்பாண்டி (22), அதே பகுதியை சேர்ந்த தொப்பை அசோக் (23), பல்லு ரவி (25) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி எம்.கே.பி நகர் பகுதியில் வீடு புகுந்து குணசேகர் மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை கத்தியால் தாக்கினர். இது தொடர்பாக அருண்பாண்டி, தொப்பை அசோக், பல்லு ரவி, எம்.கே.பி. நகர் 17வது குறுக்கு தெருவை சேர்ந்த முரளிகிருஷ்ணன் (38) ஆகியோரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்