SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின் 7வது முறையாக 136 அடியை கடந்தது முல்லைப் பெரியாறு அணை

2022-08-05@ 00:05:05

கூடலூர்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின், முல்லைப் பெரியாறு அணை 7வது முறையாக நேற்று 136 அடியை கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 2,831 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 6 மணி அளவில்  6,143 கனஅடியாக அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் 135.80 அடியானது. இரவு 7 மணியளவில் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. ரூல்கர்வ் அட்டவணைப்படி ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அணையில் 137.50 அடி வரை தண்ணீர் தேக்கமுடியும். தற்போது அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1,866 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,046 மில்லியன் கன அடி. 2014ல் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, 2014, 2015, 2018, 2019, 2020, 2021 மற்றும் நேற்று இரவு 7வது முறையாக நீர்மட்டம் 136 அடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்