SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்ய ஆயுதம்

2022-08-05@ 00:04:05

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 6 மாதமாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டின் வளங்களை அழித்துவிட்ட நிலையில்,  பல நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. போரால் நிலை குலைந்து போயிலுள்ள உக்ரைன் மீண்டும் தனது நாட்டை கட்டமைக்க பல ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்துமா என்ற பதற்றம் உலக நாடுகள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது.  அணு ஆயுதத்தை எதிர்த்து ஒரு போதும் சண்டையிடக்கூடது என்று ரஷ்ய அதிபர் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை எரிச்சல் அடைய செய்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 50 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷ்யாவின் அணுஆயுத ஆற்றலை பரிசீலிக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தான் அதிபர் புடின் சார்பில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத ஆற்றல் மிக்க ரஷ்யாவுடன் மோத முயற்சித்தால் அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என ஒன்றுக்கு இரண்டு முறை மிரட்டியுள்ளனர். இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு இதுபோன்ற எச்சரிக்கை பொறுப்பற்றது. இதனால் ஆபத்தான அணு ஆயுத தாக்குதலுக்கு வழி வகுக்கும் என கூறியுள்ளது. அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் ஆற்றல் குறித்து உலகுக்கு அதிபர் புடின் அச்சறுத்தல் விடுத்துள்ளதாக இதை எடுத்துக்கொள்கிறோம்.

உக்ரைன் போரில் எத்தகைய அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று ஆலோசிக்க தான் அவர்கள் கூட்டம் கூட்டியுள்ளார்கள் என்று உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புடினின் இந்த எச்சரிக்கையால் ஆவேசமடைந்துள்ள அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் எப்போது அணு ஆயுதப்போர் மூளுமோ என்று பதற்றத்துடன் கண்காணித்து கொண்டிருக்க வேண்டும். அணு ஆயுதப்போரை தடுக்க முடிந்தளவு அனைத்து நாடுகளும் முயற்சிக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. உக்ரைன் போரால் அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ஐநா வேதனை தெரிவித்துள்ளதோடு மட்டுமின்றி, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலை உக்ரைனில் உள்ள ஜப்போரிஜியா. இதை ரஷ்ய ஏவுகணைகள் சேதப்படுத்திவிட்டன.

இதை உடனடியாக உக்ரைன், ரஷ்யா இணைந்து சீரமைக்க உதவ வேண்டும். அப்போது தான் பெரும் அணு ஆயுத விபத்து தவிர்க்கப்படும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. அணு ஆயுத போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா தன்னிடம் உள்ள அணு ஆயுதத்தை வைத்து உலக நாடுகளை அச்சறுத்தி வருகிறது. உருவாக்குவது கடினம். அழிப்பது சுலபம் என்பதை ரஷ்யாவும் உணர வேண்டும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்