SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டில் வளர்ச்சி

2022-08-04@ 00:24:12

கடந்த  ஜூலை 28ம் தேதி துவங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகளால், சர்வதேச அளவில்  தமிழகம் சிறப்புக் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக, இப்போட்டிகளை நடத்தும் நாடுகள், முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு சுமார் ஒன்றரை ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், அறிவிக்கப்பட்ட 4 மாதங்களுக்குள் தமிழக அரசு ஏற்பாடுகளை முடித்து பாராட்டுகளை பெற்று வருகிறது. துவக்க விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு  தரப்பிலும் பாராட்டுகள் குவிகின்றன. அடுத்தடுத்த முக்கியப் போட்டிகளை நடத்த வாய்ப்பு கேட்டு, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செஸ்  ஒலிம்பியாட்டை பொறுத்தவரை இந்திய அணி வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாகவே ஆடி வருகின்றனர். குறிப்பாக, இந்திய ஆடவர் ‘பி’ அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தும் பட்சத்தில் இத்தொடரில் முதல்முறையாக தங்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. விளையாட்டரங்கில் இந்தியாவின் புகழ் சர்வதேச அளவில் உயர, வீரர்கள், வீராங்கனைகளுக்கு நவீன முறையில்  பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் லான் பவுல் நால்வர் பிரிவில் இந்திய  மகளிர் அணி முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இப்படி ஒரு விளையாட்டு இருப்பதே பல பேருக்கு தெரியாத நிலையில், இப்போட்டிகளில் வலுவான தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தங்கம் வென்றதை தரமான சம்பவம் என்றே கூற  வேண்டும். அதேபோல் ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியிலும் இந்திய அணி தங்கம் வென்று சாதித்துள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி  சுடுதல், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் முத்திரை பதித்து வருகிறது.

காமன்வெல்த்  போட்டிகளில் கூட அதிகளவு பளு தூக்கும் பிரிவிலேயே இந்தியா பதக்கங்களை குவித்துள்ளது. இனி வரும் காலங்களில் 100 மீ, 200 மீ ஓட்டம், நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் இந்திய வீரர்கள் சாதிக்கும்  திறனை பெற வேண்டும். சாதனை துடிப்புமிக்க இளைஞர்கள், இந்தியாவில் அதிகளவு உருவாக வேண்டும். அவர்களை பட்டை தீட்டி சாதனையாளர்களாக மாற்ற வேண்டும். தமிழக அரசு இளைஞர்களின் உடல் திறன், திறமையை மேம்படுத்தும் விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதேபோல் ஒன்றிய அரசும் இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பு திட்டங்களை தீட்ட வேண்டும். அவ்வாறு தீட்டும்போது, பட்டை தீட்டிய வைரங்களாக பல இளைஞர்கள் ஜொலிக்கக்கூடும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்