அள்ளூர் கிராமத்தில் தேங்கிய மழைநீரால் மக்கள் பாதிப்பு: பொதுமக்கள் கோரிக்கை
2022-08-03@ 18:26:32

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பட்ட பூதங்குடி ஊராட்சி அள்ளூர் கிராமத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு எதிரே குடியிருப்புகள் உள்ள பகுதியில் சில தினங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கனமழையின் போது இந்த கிராமத்தில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாக உள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். மாவட்ட நிர்வாகம் அள்ளூர் கிராமத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை: நீர்வளத்துறை அறிக்கை
பணி நியமனங்களில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது.! முதற்கட்டமாக ஆவணங்கள் ஆய்வு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக ஆதரவு அளிக்கும் கட்சிக்கு ஐஜேகே ஆதரவு: பாரிவேந்தர் பேட்டி
அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!