செங்குன்றத்தை சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு பாலாற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி: கோயிலுக்கு சென்று திரும்பும்போது சோகம்
2022-08-01@ 00:33:56

சென்னை: சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (44). இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் நிகழ்ச்சிக்கு வேனில் சென்றார். பின்னர், அனைவரும் நேற்று மதியம் 12 மணியளவில் சென்னைக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அருகே பாலாற்று பகுதியில் வேனை நிறுத்திவிட்டு, 10க்கும் மேற்பட்டோர் குளிக்க சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கிய சீனிவாசன் (44), வேதஸ்ரீ (10), சிவசங்கரி (15) ஆகிய 3 பேரும் சேற்றுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக பலியாகினர். இதில், வேதஸ்ரீயின் சடலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டனர். மற்ற இருவரின் சடலங்களை தீயணைப்பு படையினரும் போலீசாரும் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags:
Chengundra Chengalpattu drowned in the river 3 people died செங்குன்ற செங்கல்பட்டு பாலாற்றில் மூழ்கி 3 பேர் பலிமேலும் செய்திகள்
லாரி மீது சொகுசு பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பலி: 10 பேர் படுகாயம்
ராஜீவ்காந்தி சாலையில் ஓடும் காரில் தீ: போக்குவரத்து பாதிப்பு
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணி; 217 பதவிகளுக்கு 35 ஆயிரம் பேர் போட்டி: 126 தேர்வு மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடந்தது
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் சூரிய ஒளி மூலம் 4725 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!