காவலன் செயலி பெண்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது: மாநில மகளிர் ஆணைய தலைவி பேட்டி
2022-08-01@ 00:20:16

தர்மபுரி: தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் காவலன் செயலி பெண்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது என, மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி தெரிவித்தார். மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி, தர்மபுரியில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் இதுவரை 19 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மகளிர் விடுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம். தற்போது விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு, மாதம் தோறும் கட்டாயம் மனநல ஆலோசனை வழங்க பரிந்துரைக்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மாற்றாக 6ம் வகுப்பு முதல் முதுகலை கல்லூரி படிப்புவரை, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் சாதி, மதம், இனம் பார்க்காமல், அனைத்து தரப்பு மாணவிகளுக்கும் ஆண்டு வருவாய் மதிப்பீடு பார்க்காமல், வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு 3 வகையாக பிரித்து திட்டங்கள் வகுக்கப்படும். இந்த மூன்று வகைகளில் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பலன் அனுபவிக்கும் வகையில் திட்டம் உள்ளது. தற்போதைய நவீன யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருகியுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் காவலன் செயலி, பெண்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது. பெண்கள் கல்லூரிகளில் நடக்கும் குற்றங்களை தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Kavalan App Woman Chairperson of State Women's Commission Interview காவலன் செயலி பெண் மாநில மகளிர் ஆணைய தலைவி பேட்டிமேலும் செய்திகள்
மண் காப்போம் இயக்கத்திற்காக பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: 50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி
புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,200 காளைகள் ஆக்ரோஷம்: அடக்கப் பாய்ந்த 600 வீரர்கள்
அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றில் ரூ.100 கோடி உயர்மட்ட பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கோரி: சேலத்து இளைஞருக்கு குவியும் பாராட்டு
கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதி சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல பாதையில் விரைவில் ரயில் இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!