மத்திய பிரதேச மின்சார நிறுவனம் அலட்சியம்: ஒரு குடும்பத்திற்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம்: அதிர்ச்சியில் மாமனார் மருத்துவமனையில் அட்மிட்
2022-07-27@ 16:49:30

குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஷிவா விஹார் காலனியைச் சேர்ந்த பிரியங்கா குப்தா என்பவருக்கு மாநில மின்வாரியத்தில் இருந்து ரூ.3,419 கோடி மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் வந்தது. அதிர்ச்சியடைந்த பிரியங்கா குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்றே தெரியாது குழம்பம் அடைந்தனர். அப்போது பிரியங்கா குப்தாவின் மாமனாருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பமே பெரும் குழப்பத்தில் இருந்த நிலையில், அவர்களது உறவினர்கள் நடந்த விஷயத்தை கேட்டறிந்தனர்.
பின்னர் மின்வாரியத்திடம் மின் கட்டணம் ரூ.3,419 கோடி குறித்து விளக்கம் கேட்டனர். அந்த பில்லை பார்த்து அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் பிரியங்கா குப்தாவின் மின் கண்டன விபரம் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. ரூ.1,300 என்பதற்கு பதிலாக ரூ.3,419 கோடி என்று தவறாக பதிவாகி உள்ளது. உண்மையான தொகையை அவர்கள் செலுத்தினால் போதுமானது என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச மின்சாரத்துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!