ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழையால் தண்ணீரில் மூழ்கிய வேர்க்கடலை செடிகள்: விவசாயிகள் வேதனை
2022-07-26@ 20:22:31

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில் சோளிங்கரில் அதிகபட்ச மழை பதிவானது. பலத்த மழையால் வேர்க்கடலை செடிகள் தண்ணீரில் மூழ்கியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று பகல் மற்றும் இரவில் அதிகளவு மழை பெய்தது. சோளிங்கரில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் ெதாடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. சோளிங்கர் வெங்கட்ராயபிள்ளை ெதரு, திருத்தணி ரோடு சந்திப்பு பகுதியில் மழைநீரும், கழிவுநீரும் வெளியேறாமல் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக கார், பைக்குகள் உள்ளிட்டவை செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
மேல்வன்னியர் தெரு, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகேயும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் சோளிங்கர் சுற்றியுள்ள கிராமங்களில் வயல்வௌிகளில அதிகளவு தண்ணீர் தேங்கி பயிர்களை மூழ்கியது. குறிப்பாக நிலக்கடலை செடிகள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் இரவு முழுவதும் மழை பெய்தது. இதில் சோளிங்கரில் அதிகபட்சமாக 107 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): அரக்கோணம் 54, ஆற்காடு 22.20, காவேரிப்பாக்கம் 18, வாலாஜா 22.50, அம்மூர் 19, கலவை 18.20. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 260.90 மீட்டராகும்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!