கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம்!: மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்றார் இசையமைப்பாளர் இளையராஜா..!!
2022-07-25@ 14:47:06

டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த வாரம் திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்ட தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் இளையராஜா அன்று பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என தகவல் வெளியானது.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்றுக்கொண்டார். பதவி பிரமாணத்தில், மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின் இளையராஜா முதன்முறையாக டெல்லிக்கு சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை இளையராஜா சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!