இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு ரத்தின கற்கள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் அதிரடி
2022-07-24@ 01:35:09

சென்னை: இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த ₹1 கோடி மதிப்புடைய 8,309 காரட் எடையுடைய 1,746 ரத்தின கற்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்த இலங்கை வாலிபரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துகிறது.
இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகளின் தனிப்படை பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த முகமது அன்சர் (24) என்ற பயணி, சுற்றுலா பயணிகள் விசாவில், சென்னை வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். ஆனால் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அவரை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்த போது, அவர் வயிற்றுக்குள் ஏதோ விழுங்கி வந்துள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இனிமா கொடுத்து அவர் வயிற்றுக்குள் விழுங்கி வந்தவைகளை சிறிது சிறிதாக வெளியில் எடுத்தனர். அவருடைய வயிற்றுக்குள் சிறுசிறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரத்தின கற்கள் வெளியே எடுக்கப்பட்டன.
மொத்தம் 1,746 ரத்தின கற்களை விழுங்கி கடத்திக் கொண்டு வந்திருந்தார். மொத்த எடை 8309 காரட். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 94.34 லட்சம். ஆனால் இந்தியாவில் இந்த ரத்தின கற்கள் மதிப்பு சுமார் ₹1 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் இலங்கை பயணியை கைது செய்தனர். அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இந்த ரத்தின கற்களை, சென்னையில் யாரிடம் கொடுக்க கடத்தி வந்தார் என்று விசாரணை நடக்கிறது. இதுபோல் ரத்தின கற்களை வயிற்றுக்குள் விழுங்கி கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது, உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது
கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!