பெண் எம்எல்ஏவை மிரட்டியவர் கைது
2022-07-23@ 01:10:00

ஆம்பூர்: குடியாத்தம் பெண் எம்எல்ஏவை போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த அமுலு விஜயன் உள்ளார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். எம்எல்ஏ போனை எடுத்தவுடன், எதிர் முனையில் பேசிய நபர், பெண் எம்எல்ஏவிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, எம்எல்ஏவின் கணவர் விஜயன் உம்ராபாத் போலீசில் உரிய ஆதாரங்களுடன் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்தனர். அதில், எம்எல்ஏவை போனில் மிரட்டல் விடுத்த நபர் ஆம்பூர் அருகே உம்ராபாத் அடுத்த நரியம்பட்டை சேர்ந்த கார் டிரைவரான கதிரவன் (40) என்பது தெரியவந்தது. அவரை நேற்றிரவு கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சகோதரர் குத்திக்கொலை
பெரம்பலூர் அருகே பயங்கரம் தம்பதி கழுத்தறுத்து கொலை
கும்பகோணத்தில் தொடர்செல்போன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
ஊட்டி நகரில் இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது
இரணியல் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4.5 லட்சம் மது கொள்ளை-சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்
பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் விஏஓவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!