விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இலவச நோட்டுகள் அனுப்பும் பணி தீவிரம்-விடுபட்டவர்களுக்கு சீருடைகளும் அனுப்பி வைப்பு
2022-07-22@ 14:45:00

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் விடுபட்டவர்களுக்கும் இலவச சீருடைகளும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 1,806 பள்ளிகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. வகுப்புகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகளுக்கு அரசின் சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அரசு பாடநூல் கழகத்தின் மூலம் சென்னை, ஐதராபாத், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அச்சகத்தில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 4லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள்2லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு இலவச ேநாட்டுகளும், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான 1லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளும் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.
10ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அதேபோல் செஞ்சி, திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் அப்பகுதியில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கும் இலவச சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று தங்கள் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நோட்டுகளை பெற்று அவற்றை வாகனங்களில் பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக இறக்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகின்றனர். அதே போல் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!