சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பணியாற்றினால் ஒரு ஆண்டுக்கு ‘வொர்க் ப்ரம் ஹோம்’ : ஒன்றிய வர்த்தக அமைச்சகம் அனுமதி
2022-07-20@ 21:07:14

புதுடெல்லி: ஒன்றிய வர்த்தக அமைச்சகமானது வீட்டில் இருந்து பணிபுரியும் (வொர்க் ப்ரம் ஹோம்) விதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகளை வகுத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ‘நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் ஒரே மாதிரியான ‘வொர்க் ப்ரம் ஹோம்’ கொள்கையை பின்பற்ற புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தொழில்துறையினரின் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதியானது அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் உள்ள குறிப்பிட்ட வகை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதிக்கிறது.
இவர்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றுபவர்களும் அடங்குவர். மொத்த ஊழியர்களில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை ‘வொர்க் ப்ரம் ஹோம்’ மூலம் பணியாற்றலாம். அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பணிபுரிவோர் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. அதன்பின் தொழில்துறையினரின் அனுமதியுடன் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துக் கொள்ளலாம்’ என்பது உள்ளிட்ட விதிமுறைள் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தூக்கு தண்டனை 165 ஆக அதிகரிப்பு: கடந்த 6 ஆண்டில் 2022ல் அதிகம்.! மூன்றில் ஒரு பங்கு பாலியல் குற்றங்கள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!