ஹெராயின் வழக்கு: சென்னை உட்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
2022-07-20@ 13:07:11

சென்னை: ஹெராயின் வழக்கில் சென்னை உட்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. தேசிய புலனாய்வு முகமை இன்று அதிகாலை முதல் திருச்சி, சென்னை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி, கேரள கடலோர பகுதியான விழிஞ்சம் என்ற பகுதியில், இலங்கை படகு ஒன்றை கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். அதில், 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் இருப்பதாய் கண்டு, அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அப்படகில் பயணம் செய்த 6 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தொடர் விசாரணையின் போது, போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் என்பது பாகிஸ்தான் வழியாகவும், அதேபோல கொழும்பு நாட்டு வழியாகவும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு கொண்டு நடத்தக்கூடியது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, சுரேஷ்- சௌந்தர்ராஜன் என்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதேபோல் தேசிய புலனாய்வு முகாமையை சேர்ந்த அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட 7 இடங்களில், இதுபோன்ற சோதனையை செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் 20-க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் சோதனை நடத்திய அனைத்து இடங்களிலும், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பைச் சார்ந்த, அது தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் இந்த விசாரணையானது மேலும் நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவிலே என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது? வேறு யாரேனும் கைது செய்யப்படுவார்களா? என்ற தகவல்கள் வெளியாகும். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த 2 பேர், இலங்கை அகதிகள் 6 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை: சைபர் கிரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்: வியாசர்பாடியில் பரபரப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10வது நாளாக சிஎம்டிஏ அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணி
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
சென்னை விமான நிலையத்தில் ஜி-20 மாநாட்டு குழுவினரை வரவேற்பதற்கான பதாகைகளில் முதல்வர் படம் இல்லாததால் அதிருப்தி
10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!