தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்
2022-07-20@ 10:17:52

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் தாமதமாக செயல்பட்டுள்ளது. நேற்று இரவு சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக சென்னை புறநகர் மின்சார சேவையில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
குறிப்பாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு நோக்கி இயக்கபடக்கூடிய புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மருமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வழியாக கடற்கரை நோக்கி இயக்கபடக்கூடிய மின்சார ரயில்கள் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை முதல் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லக்கூடிய ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ரயில்கள் அனைத்துமே அரைமணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில்கள் இயக்கம் என்பது தாமதமானது. பின்னர் சிகனல் கோளாறு சரி செய்யப்பட்டு அரைமணி நேரத்திற்கு பிறகு ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டது. இதன் காரணமாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் பெருவாரியாக குவிந்துள்ளனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாத சூழலை பார்க்க முடிகிறது.
மேலும் செய்திகள்
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது
கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!