சிரஞ்சீவி வீட்டில் ஆமிர் கான் படம் பிரீவியூ
2022-07-17@ 00:45:32

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தயாரித்து நடித்த இந்திப் படத்தின் பிரீவியூ நடந்தது. தற்போது அந்த போட்டோக்கள் வைரலாகியுள்ளது. இந்தியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம், 'லால் சிங் சத்தா'. இது 'பாரஸ்ட் கம்ப்' என்ற நாவலைத்தழுவி, கடந்த 1994ல் அதே பெயரில் அமெரிக்காவில் வெளியான படத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். கடந்த 2019ல் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ஆமிர் கான், கரீனா கபூர், நாகசைதன்யா, மோனா சிங், நேஹர் கான், ஆர்யா சர்மா ஆகியோருடன் கவுரவ வேடத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார்.
பாடல்களுக்கு பிரீதம் இசை அமைத்துள்ளார். வரும் ஆகஸ்டு 11ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில், 'லால் சிங் சத்தா' படத்தின் பிரத்தியேக காட்சி ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டில் நடந்தது. இதில் சிரஞ்சீவி, நாகார்ஜூனா, நாகசைதன்யா, இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி, சுகுமார் கலந்துகொண்டு படத்தைப் பார்த்து ரசித்தனர். தன் வீட்டுக்கு வந்த ஆமிர் கான் படத்தைப் பார்த்து ரசித்தது, பிறகு அதுபற்றி விவாதம் செய்தது போன்ற வீடியோவை சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார். மேலும், தனது வீட்டில் இந்தப் படத்தின் பிரத்தியேக காட்சியை நடத்தியதற்காக மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!