செங்கல்பட்டில் உள்ள தோட்டக்கலை துறை கடைகள் ஏலம்: துணை இயக்குநர் தகவல்
2022-07-16@ 00:41:46

செங்கல்பட்டு: தோட்டக்கலை துறைக்கு சொந்தமான கடைகள் மாத வாடகைக்கு விடுவதற்கான ஏல விபரம் பற்றி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் தே.சாந்தா செலின் மேரி அறித்துள்ளார். இது தொடர்பாக சாந்த செலின் மேரி வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு டவுன் அண்ணாசாலை மார்க்கெட் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில் இரண்டு கடைகள், முதல் தளத்தில் 2 கடைகள் மற்றும் இரண்டாம் தளத்தில் 2 கடைகள் ஆக மொத்தம் 6 கடைகள் கட்டப்பட்டு உள்ளது. இவற்றில் தரை தளத்தில் ஒரு கடையில் தோட்டக்கலை துறையின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்கள் ஆகியவற்றை நேரடி விற்பனை செய்ய டான்ஹோடா விற்பனையகம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றது. இதில், 5 கடைகளை மூன்று வருடத்திற்கு வாடகை விட தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.
மூன்று வருடத்திற்கு மாதாந்திர வாடகைக்கு கடைகளை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்களுக்கு இதற்கான விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் வரும் 25ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டுகிறது. விவரங்களை, தோட்டக்கலை துணை இயக்குநர், செங்கல்பட்டு (இருப்பு) அரசு தோட்டக்கலை பண்ணை, ஆத்தூர் அலுவலகத்தில் விண்ணப்ப நிபந்தனைகள் மற்றும் படிவம் ஆகியவற்றை ₹300/- செலுத்தி நேரில் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை: சைபர் கிரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்: வியாசர்பாடியில் பரபரப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10வது நாளாக சிஎம்டிஏ அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணி
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
சென்னை விமான நிலையத்தில் ஜி-20 மாநாட்டு குழுவினரை வரவேற்பதற்கான பதாகைகளில் முதல்வர் படம் இல்லாததால் அதிருப்தி
10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!