அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு- தூவானம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
2022-07-15@ 13:53:18

திருப்பூர்: அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாறு ,தூவானம், மறையூர், காந்தளூர் போன்ற பகுதிகளை இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் மறையூர் கோவில் கடவு பகுதியில் உள்ள பாம்பாற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளால் பாலத்தின் மீது தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக தூவானம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
அமராவதி அணைக்கு தற்சமயம் நீர்வரத்து வினாடிக்கு 8,563 கனஅடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி பிரதான 4 மதகு வழியாக 1531 கன அடி நீரும் ,பிரதான கால்வாய் வழியாக 190 கன அடியும் வெளியேற்றபடுகிறது. அமராவதி அணையின் மொத்த 90 அடியில் தற்பொழுது மொத்த 90 அடியில் 85.83 அடியாக உள்ள நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வண்ணம் உள்ளதால் நேற்றைய தினம் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!