சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்: சிந்து சாய்னா வெற்றி
2022-07-14@ 00:55:17

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் சுற்றில் சாய்னா வெற்றி பெற்றுள்ளார். சக இந்திய நட்சத்திரங்கள் சிந்து, பிரணாய் ஆகியோரும் முன்னேறி உள்ளனர். சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றும் தொடர்ந்தன. இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பெல்ஜியம் வீராங்கனை லியானே டன் உடன் மோதினார். அதில் சிந்து 29 நிமிடங்களில் 21-15, 21-11 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 31 நிமிடங்களில் 21-16, 21-11 என நேர் செட்களில் தாய்லாந்தின் பூஸ்னன் ஆங்பம்ருங்பனை வீழ்த்தினார். முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சாய்னா நெஹ்வால் பல போட்டிகளுக்கு பிறகு முதல் சுற்றில் வென்று அசத்தியுள்ளார். சக இந்திய வீராங்கனை மாளவிகா பன்சூட் உடன் மோதிய அவர் 34 நிமிடங்களில் 21-18, 21-14 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.
முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரதான சுற்றுக்கு தகுதி ஆட்டம் மூலம் முன்னேறி இருந்த இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மிதுன் ஒரு மணி நேரம் போராடி 21-17, 15-21, 21-18 என்ற செட்களில் கிடாம்பியை வீழ்த்தினார். இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதிய பாருபள்ளி காஷ்யப் 14-21, 15-21 என நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார்.
மலேசிய மாஸ்டர்ஸ் ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய எச்.எஸ்.பிரணாய் 35 நிமிடங்களில் தாய்லாந்து வீரர் சித்திகோம் தாம்மாசினை 21-13, 21-16 என நேர் செட்களில் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் நிதின் - பூர்விஷா ராம் இணை 24 நிமிடங்களில் 21-15, 21-14 என நேர் செட்களில் இஸ்ரேலின் மிஷா ஜில்பெர்மன் - ஸ்வெட்லானா ஜில்பெர்மன் இணையை சாய்த்தது.
மேலும் செய்திகள்
இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு
சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை: 2வது இடத்திற்கு சபலென்கா முன்னேற்றம்.! ஆடவரில் ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1
யு19 டி.20 தொடரில் சாம்பியன் பட்டம்: இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும்.! ஷபாலி வர்மா பேட்டி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒன்டே: 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேமரூன் கிரீன் விலகல்
சுந்தர் ரன் அவுட் என் தவறால் வந்தது; சூழலுக்கு ஏற்ப விளையாடுவது முக்கியமானது.! ஆட்டநாயகன் சூர்யகுமார் பேட்டி
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!