SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமானப்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்க, 20 முறை வானில் பறந்து சென்ற ஹெலிகாப்டர்; குன்னூரில் சுற்றுலா பயணிகள் ரசிப்பு

2022-07-13@ 21:37:09

குன்னூர்: விமானப்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்க, குன்னூர் ஜிம்கானா மைதானத்தில் 20 முறை வானில் பறந்துசென்ற ஹெலிகாப்டரை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஜிம்கானா மைதானம் உள்ளது. ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த பகுதியில் விமானப்படை அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் பைலட்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. காலை முதல் மதியம் வரை இந்த பயிற்சி நடந்தது.

ஹெலிகாப்டரை தரையில் இருந்து உயர்த்தி செல்லும் பயிற்சி, பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் விதத்தில், அந்தரத்தில் சிறிது நேரம் ஹெலிகாப்டரை நிலைநிறுத்துவது மற்றும் உயரத்தில் பறந்து தரையிறக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் பைலட்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி காரணமாக 20-க்கும் மேற்பட்ட முறை வானில் ஹெலிகாப்டர் பறந்து சென்றது. இதனால் ஹெலிகாப்டரை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்ததுடன் புகைப்படங்களும் எடுத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்