சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நடிகைக்கு அன்னை தெரசா விருது
2022-07-13@ 17:02:50

மும்பை: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நடிகை தியா மிர்சாவுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அன்னை தெரசா நினைவு விருதுகள் ஹார்மனி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அதன்படி கடந்தாண்டிற்கான அன்னை தெரசா நினைவு விருதுகள் பாலிவுட் நடிகையும், ஐ.நா.வின் சுற்றுச்சூழல் தூதுவருமான தியா மிர்சா மற்றும் ‘ஐ.நா. சாம்பியன் ஆஃப் தி எர்த்’ விருது பெற்ற அப்ரோஸ் ஷா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மேற்கண்ட இருவருக்கும் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘சுற்றுச்சூழலுக்கான சேவையானது கடவுளுக்கு செய்யும் சேவையாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பணியாற்றும் தியா மிர்சா, அஃப்ரோஸ் ஷா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். மற்றவர்களும் இவர்களை போல் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என்றார்.
மேலும் செய்திகள்
வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை
நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்
வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்
கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!